அன்புள்ள மனிதத்திற்கு,
படித்ததில் பிடித்தது
படிக்க பிடித்தது
படிக்கும் போதும் படிக்கும்-
உன்னை
வெற்றுத் தாள்களாய்!!
வெற்றுத் தாள்களை விரும்பும் இவரும் ஒரு முரண் போல வார்த்தை விரையமிட்டு தாள்களில் மை கிருக்கி கோழையாய் நேரத்தையும் கொலை செய்வாரோ என குழம்ப வேண்டாம்...
"வெறுமை கவியை இரசிக்கும்;
கவிதை வெறுமையை இரசிக்கும்!!"
இது வேண்டா வெறுப்பாய் கவிதையாகவில்லை மனிதத்திற்கு வேண்டும் என்றே...!
யோசித்திட ஒட்டக்கூத்தர் மூளையும் தேவையோ?
எழுதுகோலின் விளைபொருள் மைக்கிருக்கள்கள் என்பதைத்தாண்டி காலத்தைத் திண்ணும் கரையானாகிய உணர்வாய்,ஊசியாய்,சுவடாய்,புதிய பாதையாய் அமையும் என்பதை நம்பியே வெற்றுத் தாள்களில் காதலினும் கிருக்கத் தயார் செய்கிறார் தன் கோலினை...
இப்படிக்கு,
கம்புள் ஆகிய நான்...